விக்கிரவாண்டி தேர்தல்...கள்ளச்சாராய மரணங்கள்!! அதிரும் தமிழகம் - இன்று கூடும் சட்டப்பேரவை!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
தமிழ்நாடு களம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40/40 வெற்றி பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற்று புது தெம்புடன் இருக்கிறது. அதே உத்வேகத்துடன் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி முற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று கள்ளக்குறிச்சியில் கள்ளசாராய மரணங்கள் தமிழக அரசியலில் கடும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழல்களுக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.
சட்டப்பேரவை கூட்டம்
ஜூன் 29 வரை நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற கூட்டத்தில் ஜூன் 21, 22, 24-ஆம் தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை காலை 9.30 மணியில் இருந்து 1.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 5 முதல் 8 மணி வரையிலும் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெறும் சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.