இன்று கூடும் சட்டப்பேரவை , தயாராகும் முக்கிய அறிக்கைகள் : பரபரப்பில் பேரவை
2வது நாளாக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை என 2 அறிக்கையும் இன்று சட்டசபையில் வைக்கப்பட உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையில், கடந்த மார்ச்சில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, இதைத் தொடர்ந்து, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடந்தது.,இந்த நிகழ்வுகள் முடிந்ததும், மே மாதம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்றைய தினம் கூடியது,இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வரவில்லை.
புறக்கணித்த எடப்பாடி
அவரைப்போலவே, அவரது தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதேசமயம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
இந்த 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இன்று முக்கிய விவாதங்கள்
ஏற்கனவே, இதன் 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சட்டசபையில் முன்வைக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் அவற்றின் மீது விவாதம் நடத்தப்படும் என்று அப்பாவு நேற்றையதினம் கூறியிருந்த நிலையில் இன்றைய சட்டப்பேர்வைக் கூட்டம் கொஞ்சம் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.