ரியல் துரை சிங்கம் போலீஸ் அர்ஜுன் சரவணன் உளவுத்துறை எஸ்.எஸ்.பியாக நியமனம்
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக உளவுத்துறைக்கு என கூடுதலாக ஒரு கண்காணிப்பாளரை (எஸ்.எஸ்.பி)-யை தமிழக அரசு நியமித்து உள்ளது. நெல்லை காவல்துறை உளவுத்துறை கூடுதல் எஸ்.எஸ்.பி.யாக அர்ஜுன் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போது புதிதாக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவார்கள். அந்த வகையில் காவல் துறையில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் உளவுத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை புதிய திமுக அரசு கொண்டு வந்தது
இந்த நிலையில் தமிழக உளவுத்துறை வரலாற்றில் முதல் முறையாக மேலும் ஒரு எஸ்.எஸ்.பியை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.எஸ்.பியாக இருந்த அர்ஜுன் சரவணன் தான் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் எஸ்.எஸ்.எஸ்.பி. ஆவார்.
இவர் 2020 ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்தபோது பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஓடோடி சென்று தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தார்.
நெல்லையில் ரவுடிகள், குற்றவாளிகளை ஒடுக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.தற்போது அவர் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பது பலரது வரவேற்பை பெற்று இருக்கிறது.
உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் அர்ஜுன் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.பி பதவி சக்திவாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது