தவெக மாநாடு - தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது!
தவெக மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாடு
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 'ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கோரி, அக்கட்சியினர் மனு அளித்தனர். இந்நிலையில், இம்மாநாட்டிற்கு என தவெகவுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநாட்டில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். தவெக கட்சி வழங்கும் கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அட்டை இல்லாதவர்கள், மாநாட்டு நடக்கும் இடத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த அட்டை இல்லாதவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநாட்டில் பங்கேற்க குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை.
அனுமதி இல்லை
தவெக மாநாட்டில் பங்கேற்பதற்கு புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. இடையூறுகளை தவிர்க்க அவர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்துவதற்கு என புதுச்சேரியில் பாண்டி மெரினா பார்க்கிங், மைதான பின்புறம் மற்றும் பழைய துறைமுக பகுதி ஆகியவற்றில் வாகனங்களை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சாலையோரங்கள் அல்லது மாநாட்டின் உள்ளே வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சிகிச்சை, தீயணைப்பு வாகனங்கள்,அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.