தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: ஊக்கத்தொகையும், மானியமும் - இவ்வளவு அம்சங்களா..?

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu DMK M. R. K. Panneerselvam
By Jiyath Feb 20, 2024 06:28 AM GMT
Report

தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இது திமுக அரசு தாக்கல் செய்யும் 4-வது வேளாண் பட்ஜெட் ஆகும்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: ஊக்கத்தொகையும், மானியமும் - இவ்வளவு அம்சங்களா..? | Tamil Nadu Agriculture Budget 2024 Schemes

நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்

10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு. நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: ஊக்கத்தொகையும், மானியமும் - இவ்வளவு அம்சங்களா..? | Tamil Nadu Agriculture Budget 2024 Schemes

மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு. எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு. ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு. ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு. ”ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு. சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு. வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.

தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சி; கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு - பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சி; கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு - பரபரப்பு!

விவசயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு. விவசயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1775 கோடி ஒதுக்கீடு. தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.

'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு. 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு. உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.