மத்திய பட்ஜெட் 2026: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட என்ன காரணம்?
2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் போது அவர் நிகழ்த்திய உரையில், வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவின் தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும்,பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வருடா வருடம் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 2027 -க்கான நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
இவர் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நிதி நிலையை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரி மருத்துவத்திற்கு ரூ10,000 கோடி மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலங்களோடு இணைந்து 3 கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என இந்த நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்க்கு ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலுக்கு ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி(உயிரி மருத்துவம்) திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரியும் குறைக்கப்பட்டு உள்ளதாக இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் புற்றுநோய் மருந்துந்துகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் புற்றுநோய் மருந்துகளில் 17 மருந்துகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு விகிதத்தை 50% ஆக அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் , அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
16வது நிதிக்குழு பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கானப் பங்கை அதிகரிப்பது தொடர்பாக, 16-வது நிதி ஆணையத்திடம் (16th Finance Commission) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தமிழக அரசு கோரிக்கை என்ன?
தற்போது மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதை 50% ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து.
அதாவது நிதிப் பகிர்வை நிர்ணயிக்கும் போது 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்குப் பதிலாக, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். சிறப்பாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பது தமிழகத்தின் வாதமாக இருக்கிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தமிழகம் போன்ற மாநிலங்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அதற்கு 15% முக்கியத்துவம் (Weightage) வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு வசூலிக்கும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.
இதனை மாற்றியமைக்க வேண்டும் அல்லது இதன் அளவை 10% க்குக் குறைவாகக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாநில பேரிடர் மேலாண்மை நிதியினை 50% ஆக உயர்த்தி, மத்திய-மாநில நிதிப் பங்கீட்டை 90:10 என்ற விகிதத்தில் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கோரிக்கைகளை முன்வைத்தது.
ஆனால், இன்றைய மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, 16வது நிதிக்குழு பரிந்துரைகள் ஏற்கப்பட்டதால், வரி பகிர்வு விகிதம் அதிகரிப்பு கிடையாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிந்துள்ளார்.
தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்படமால் பட்ஜெட் வெளியாகி உள்ளது தமிழக அரசுக்கு பெரும் ஏமாற்றமாக கருதப்படுகிறது.