ரூ. 5 கோடி கொடுத்து விட்ட ஓ.பி.எஸ்; பல அச்சுறுத்தல்கள் வந்தது - தமிழ் மகன் உசேன்!
தனக்கு சாதகமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி அனுப்பி வைத்ததாக தமிழ் மகன் உசேன் பேசியுள்ளார்.
பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னசமுத்திரம் கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி கொடுத்து விட்டார். அந்த பணத்தை கொண்டு வாந்தவரை போடா ராஸ்கல் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன்.
அச்சுறுத்தல்கள்
இதுகுறித்து உடனே எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று தகவலை தெரிவித்தேன். அவர் "அண்ணே நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் இனிமேல் வீட்டில் இருக்க வேண்டாம்" என்று கூறி எனக்காக லாட்ஜில் தனியாக அறை எடுத்துக் கொடுத்து 15 பேரை பாதுகாப்புக்காகவும் வைத்தார்.
எனக்கு செல்போனில் தலை எடுப்பேன். உயிரை எடுப்பேன் என்று செல்போனில் பல அச்சுறுத்தல்களும், அறைகூவல்களும் வந்தன. அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். பணத்திற்காகவோ அல்லது என் உயிர் போகும் என்பதற்காகவோ பதவிக்காகவோ இந்த இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல" என்று பேசியுள்ளார்.