யாராவது சொல்லுங்களேன் இதனாலேயே இறந்து போகலாம் : தமிழ் கடல் நெல்லை கண்ணனின் நிறைவேறாத ஆசை
சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கண் கலங்கி பேசினார். அதில் நெல்லை கண்ணன் பேசியதாவது:
திருமாவின் மடியில் தானே மடிவேன்
திருமாவின் மேடையில் மடிந்தால் திருமாவின் மடியில் தானே மடிவேன் அதுதான் எனக்கு பெருமை. அந்த பெருமை கிடைத்தால் போதும். என் பொது வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு விருது கொடுத்து என்னை இதுவரை யாரும் கௌவரப்படுத்தியது இல்லை.
முதல்வரிடம் கைகூப்பி கேட்கிறேன். முதல்வரிடமும், திருமாவிடமும் நான் கேட்டுக்கொள்வது உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். உங்களின் விழிவட்டப் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாறும் இல்லை.
வட மாவட்டத்திற்கு தலைவன் திருமா தான். காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன். காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை . இரண்டாம் விடுதலை போரில் விடுதலை வாங்கி தந்தவர் நீங்கள் தான்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நீங்கள் பொறுப்பு ஏற்கும் போது, உங்களது மனைவி கண்ணீர் வடித்தார்கள். நானும் கண்ணீர் வடித்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை கருணாநிதி அழைத்ததார். அப்போது எனக்கு புத்திக்கு அது உரைக்கவில்லை.
கருணாநிதியை எதிர்த்து தன்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார். இன்று அரசியல் அநாதையாக்கிவிட்டார்கள். இப்பேச்சைக் கேட்டு திருமாவளவன் மேடையிலேயே கண்ணீர் சிந்தினார்.
அனைவரது நெஞ்சிலும் ஆழப் பதிந்த நெல்லை கண்ணனின் உருக்கமான பேச்சாகும்,அதே சமயம் இந்த சம்பவம் முடிந்து பல நாட்கள் கழித்து நெல்லை கண்ணன் தன்னுடைய முக நூல் பதிவில் :
அதில், வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கின்றது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகின்றது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன்
விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமரவைத்து என்னிடம் காட்டிய தாயுல்ளத்தை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் .
அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது என்றார் . இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேனென்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார் .
எந்த ஒரு கடிதத்திற்கு கூட விடை இல்லை நேரில் பேச அனுமதிக்கவில்லை 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன் யாராவது சொல்லுங்களேன் இதனாலேயே இறந்து போகலாம் எனக்கருதுகின்றேன் மரணம் தானே உறுதி என மிகவும் நொந்து பதிவிட்டிருந்தார்.இறுதி வரை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசாமுடியாமலே அவரின் ஆசையும் கானல் நீராய் மறைந்து போனது .
ஆண்டவனையும் ஆள்பவரையும் அவன் இவன் என அழைத்து அழகு மொழி பேசிய தமிழ் கடல் நெல்லைகண்ணன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.