இனிமேல் அரசு பணிக்கு தமிழ் அவசியம் : சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

DMK Palanivel Thiagarajan
By Irumporai Jan 13, 2023 09:39 AM GMT
Report

இனிமேல் அரசு பணிக்கு தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி முக்கியம் என்பதும் அதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

இனி தமிழ் தெரியணும்

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் அரசு மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் இளைஞர்கள் 100 சதவிகிதம் பணி கிடைப்பதை உறுதி செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இனிமேல் அரசு பணிக்கு தமிழ் அவசியம் : சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் | Tamil Is Necessary For Government Work

சட்டதிருத்த மசோதா

மேலும், 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது.

டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து அரசுப் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது