உலகில் முதன்முறையாக... இரும்பை கண்டுபிடித்த தமிழன்

Tamil nadu Egypt Tamil
By Fathima Feb 17, 2026 07:55 AM GMT
Report

தென்காசியில் உள்ள சிவகளை அகழாய்வில் 8 அடி நீளமுள்ள இரும்பு வேலை கண்டறிந்துள்ளதாக முன்னாள் இந்திய தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகள் குறித்து திருவள்ளூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் பேசிய போதே இதனை குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், இரு வெளிநாட்டு ஆய்வாளர்கள் எகிப்தின் ராஜ பள்ளத்தாக்கில் 30 இடங்களில் தமிழி எழுத்து இருந்ததை கண்டறிந்துள்ளனர். 

குறிப்பாக எகிப்தில் கண்டறியப்பட்ட சிகை கொற்றன் என்ற பெயர் கரூரில் உள்ள புகலூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்து எகிப்திற்கு வணிக தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகில் முதன்முறையாக... இரும்பை கண்டுபிடித்த தமிழன் | Tamil In Egypt 

உலகில் முதன்முறையாக தென்காசியில் உள்ள சிவகளை அகழாய்வில் 8 அடி நீளமுள்ள இரும்பு வேலை கண்டறிந்துள்ளோம்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என்பதை தமிழர்கள் மட்டும் தான் சொல்வோம். இவர்கள் என்ன வாளோடு பிறந்தார்களா என சிலர் கேட்பார்கள். இரும்பை கண்டுபிடித்தது தமிழன் தான் என்பது உறுதியாகியுள்ள போது அதனை எப்படி மறக்க முடியும்?

இரும்பு சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் என்ற பகுதியில் தான் கண்டறியப்பட்டது. 

சிவகளை அகழாய்வு கிமு 3300 என்று நிறுவியுள்ளது. இன்றிலிருந்து 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பை நாம் கண்டுபிடித்துள்ளோம், இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம் என்ற செய்தியை உலகிற்கு பறைசாற்றுகிறோம்" என பேசினார்.

மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.