அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் : அதிமுக செயற்குழுவில் முடிவு
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினரான அன்வராஜா, நிலோபர் கபில் போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில்,
இசுலாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தமிழ் மகன் உசேனை அதிமுக நியமித்துள்ளது

முன்னதாக அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததை ஒட்டி புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் சூரிய மூர்த்தி என்பவர் கடந்த சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்திருப்பதாகவும் , உட்கட்சி தேர்தல் நடத்தி , தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே அவைத்தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதற்காக தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது