நாகரிகமும் வளர்ச்சியும் தமிழன் போட்ட பிச்சை : மன்னர் மன்னருடன் நேர்காணல்

IBC Tamil
By Irumporai Apr 25, 2022 12:00 PM GMT
Report

காலத்தை கணித்தவர்கள் , என கூறுவது நாம் எப்போதும் மாயன்களையே கூறி வந்த நிலையில் தமிழர்கள் கடிகாரம் வரும் முன்பே காலத்தை கணித்துள்ளார்கள் .

அதாவது செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்கள்பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் .

அதே போல் மனித நாகரிகங்களில் மிகவும் செழுமை வாய்ந்த அதே சமயம் இன்று உலக மக்கள் பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நாகரிகங்களில் சிற்ந்து விளங்கினர். சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

பண்டைய தமிழர்கள் வானியல் ஆய்வுகளை பண்டைய தமிழர்கள் கணித்தது எப்படி விளக்குகின்றார் மன்னர் மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில் 

[