ராஜாராணி - 2 சீரியல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையா..எதற்காக தெரியுமா?
ராஜா ராணி சீரியல் குழுவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் திருமணம் சீரியலில் நடித்த சித்தார்த் மற்றும் ஆல்யா மனஸா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ராஜா ராணி 2 சீரியலில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் இடம்பெற்ற வசனங்களும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, பலரும் ராஜா சீரியல் மீதும் குழுவினர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் குரல் எழுப்பி சர்ச்சையை எழுப்பினர்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் அளவுக்கு ராஜா ராணி சீரியலில் அப்படி என்ன ஒளிபரப்பானது என்றால், தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்த மருமகள் ஆல்யா மானசாவை மாமியார் திட்டுவது போல இடம்பெற்ற காட்சிதான் காரணமாக அமைந்துள்ளது.
ராஜா ராணி சீரியலில் மாமியார் மருமகளைக் கண்டித்து, “எங்க வீட்டில் யாரும் ஒட்டு போட மாட்டோம். அதற்கு நீ மன்னிப்பு கேள். ஒட்டு போட்டதற்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று கூறுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ஒட்டு போடுவது தப்பு என்று சொல்வது சட்ட விரோதம் இல்லையா இதனால் இந்த சீரியல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுப்பி சர்ச்சையைக் கிளப்பினர்.