பிரபல திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்புக் காரணமாக காலமானார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கே.வி.ஆனந்த் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தமிழில் முதல் முதலாக காதல் தேசம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக அவர் பணியாற்றினார். 'அயன்', கோ, 'மாற்றான்', 'அனேகன்', 'கவன்', 'காப்பான்' போன்ற படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த்.மோகன்லால் நடித்த 'தேன்மாவின் கொம்பத்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கே.வி.ஆனந்த் நேருக்குநேர், பாய்ஸ், முதல்வன்', செல்லமே, சிவாஜி, போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
பல்வேறு மொழிகளில்., தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி என பல்வேறு மொழித் திரைப் படங்களில் ஒளிப்பதிவாளராக புகழ் பெற்றவர். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் , 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார்.
1995 ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படமான தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார்.
இவரின் சிறந்த ஒளிப்பதிவில் வெளியான படங்களில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த முதல்வன் படத்தின் ஒளிப்பதிவு பலரின் பாராட்டைப் பெற்றது.