வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

Mullivaikal Remembrance Day
By Irumporai May 18, 2022 06:01 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படுகொலை நாளான இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படுகொலை நாளான மே18 முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின் போது, கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு | Tamil Exterminatio Event In Colombo

அதேசமயம் பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றணாற் , இந்த நிகழ்ச்சியில் தமிழர்களுடன் சிங்கள மக்களும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.

கடந்த சில காலமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கொழும்பில் முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் அனுசரிக்கப்படுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.