தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - அரசாணை வெளியீடு
Tamil
Education
Important Job
By Thahir
தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரி, கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்கள்,
ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல பிரிவினருக்குமான முன்னுரிமை பட்டியலையும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பகங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை மற்றும் மானியக்கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.