Sunday, Jun 15, 2025

பிதாமகன், கஜேந்திரா,லூட்டி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்!

Tamil Cinema Death Tamil Actors Tamil Producers
By Jiyath 2 years ago
Report

பிதாமகன், கஜேந்திரா,லூட்டி உள்ளிட்ட படங்களின் பிரபல தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்.

தயாரிப்பாளர்

சூர்யா, விக்ரம், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா, காகித கப்பல் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை(59).

பிதாமகன், கஜேந்திரா,லூட்டி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்! | Tamil Cinema Famous Producer V A Durai Passed Away

இந்த படங்களில் ஒரு படத்தை தவிர மற்ற படங்கள் வி.ஏ. துரைக்கு வெற்றிகரமாக அமையவில்லை. கடந்த சில மாதங்களாக இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரின் ஒரு கால் அகற்றப்பட்டது.

காலமானார்

நிதி நெருக்கடியில் இருந்த அவர் தனக்கு உதவ வேண்டும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து சில பிரபலங்கள் அவருக்கு உதவினர். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் இன்றிரவு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு இவரின் தயாரிப்பில் விக்ரம்,சூர்யா நடித்து வெளிவந்த பிதாமகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.