இயக்குநர் சேரன் வீட்டில் எதிர்பாராத மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள், திரையுலகினர்!
இயக்குநர் சேரனின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்.
சேரன்
இயக்குநரும், நடிகருமான தமிழ் திரையுலகையே கலக்கியவர் சேரன். இவர் இயக்கிய திரைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தமிழில் பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து ,மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அவரே இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்' என்ற படம் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உழைத்த பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் குடிமகன் என்ற படம் வெளியானது.
தந்தை மரணம்
இந்நிலையில் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன், அவரது சொந்த ஊரான மதுரை, பழையூர்பட்டியில் இருக்கும் வீட்டில் இன்று காலமானார். 84 வயதான அவர் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் ஆவார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேரனின் தந்தை மறைவையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சேரனுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.