கோவின் இணையதளத்தில் இரண்டே நாட்களில் தமிழ்- மத்திய அரசு
கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் கோவின் தளத்தில் தமிழ் மொழி இடம் பெறாதது விவாதம் ஆகியுள்ளது .
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை அறிந்துகொள்ள (cowin.gov) என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.
அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்த நிலையில், கூடுதலாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் மொழி இணைக்காமல் இருப்பதற்கு பல் வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.