ரிப்பன் மாளிகையில் 'தமிழ் வளர்க' பெயர் பலகை இன்று நிறுவப்பட்டது..!
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மேல்தளத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இருந்த "தமிழ் வாழ்க" என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது.
ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்த பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மீண்டும் ஒளிரும் தமிழ் #தமிழ்_வாழ்க pic.twitter.com/PGWSV71wh5
— Velmurugan Paranjothy/ ப.வேல்முருகன் (@Vel_Vedha) June 3, 2021
இந்த நிலையில் ரிப்பன் மாளிகை மறு சீரமைப்பு பணி இறுதி கட்டத்தில் உள்ளதால் "தமிழ் வாழ்க " என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இன்று கருணாநிதி பிறந்த நாள் என்பதால் அந்தப் பெயர் பலகை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.