பிக் பாஸ் நிகழ்ச்சியின் கட்டை குரலுக்கு சொந்தக்காரரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளியான தகவல்

vijay tv voice 1 to 5 tamil big boss salary revealed seasons
By Swetha 10 மாதங்கள் முன்

தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சி.

வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என நிரந்தர போட்டியாளர்கள் யாரும் கிடையாது.

ஒவ்வொரு சீசனுக்கும் போட்டியாளர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அதேசமயம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மட்டும் மாற்றப்படவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவரை தவிர, இந்த நிகழ்ச்சியில் நிரந்தரமாக பணியாற்றி வரும் மற்றொரு நபர் இருக்கிறார். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டை குரலில் பின்னணியில் இருந்து வாய்ஸ் கொடுக்கும் சாஷோ.

பிக் பாஸ் தவிர வேறு எந்த நிகழ்ச்சி அல்லது திரைப்படத்துக்கும் இதுவரையில் இவர் வாய்ஸ் கொடுத்ததில்லை. அதேசமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் இந்த கம்பீரமான கட்டை குரலின் ஒலி ஆழமாக பதிந்து இருக்கும்.

அந்த அளவுக்கு வார்த்தை உச்சரிப்பை தெளிவாகவும், உரக்கமாகவும் செய்வதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் சாஷோ.

இன்னும் சொல்லப்போனால், இவரது குரலால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி தோரணையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு சீசனிலும் 100 நாட்களுக்கு நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு, சாஷோ ஒருவர் மட்டுமே வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் 5 சீசனுக்கு அவர் பெற்றிருப்பதாகக் கூறப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டாலே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்த ஒரு சீசனுக்கு மட்டும் அவருக்கு ரூ.17.5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டதாம். அதாவது, 3 மாதமாக கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் வாங்கியிருக்கிறார் சாஷோ.