பிரபல வில்லன் நடிகர் மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பளரான மோகன் நடராஜன் காலமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோகன் நடராஜன்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
சிட்டிசன், மகாநதி, பட்டியல் உள்ளிட்ட படங்களில் வில்லலனாக நடித்து கவனம் ஈர்த்தவர் மோகன் நடராஜன்.
தயாரிப்பாளர்
பூக்களைப் பறிக்காதீர்கள் எனும் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் நடித்த ஆழ்வார், சூர்யா நடித்த வேல் மற்றும் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.
21 வயதான மோகன் நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் சூர்யா, இயக்குநர் பி. வாசு உள்ளிட்ட சினிமா துறையினர் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் திருவொற்றியூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.