பிரபல நடிகர் மதன் பாப் காலமானார் - அறியப்படாத மறுபக்கம்
பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்.
மதன் பாப்
1953 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கிருஷ்ண மூர்த்தி, மதன் பாப் என தனது பெயரை மாற்றிக்கொண்டு, 1984 ஆம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார்.
150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், விஜய், அஜித், கமலஹாசன் என முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள அவர், அவரது தனித்துவமான சிரிப்பால் பிரபலமானார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லதில் காலமானார்.
இசையமைப்பாளர்
மதன்பாப் நடிகர் மட்டுமின்றி, மிகச்சிறந்த கிட்டார் வாசிப்பாளராக இருந்துள்ளார். சில விளம்பர படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
அவரது சகோதரர் பாபு சிறந்த ட்ரம்ஸ் கலைஞர். இதன் காரணமாகத்தான் தனது பெயரை மதன் என மாற்றி அதனுடன் பாப் என்று சேர்த்து மதன் பாப்பாக மாறினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் மதன் பாப்பிடம் பணியாற்றியிருக்கிறார்கள். ஏகப்பட்ட இசை கச்சேரிகளையும் அவர் செய்திருக்கிறார்.
மேலும், உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வரும் அவர், ஒரு பாக்ஸராகவும் இருந்துள்ளார்.
அவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.