நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற விஷால் அணி - உற்சாக கொண்டாட்டம்
நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் தலைமை பதவிகளை கைப்பற்றியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த மாதம் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி முன்னிலை வகித்த வண்ணம் இருந்தது.
இதில் பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதேசமயம் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் தேர்தலில் பதிவான வாக்குகளை விட வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் வாக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil