பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி... - வைகோ பேச்சு...!
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன்
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்திப்பின்போது, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் இருக்கிறார் என்று தெரிவித்தார்.
அவருடன் நான் தொடர்பில் உள்ளேன். அவர் மனவி,மகளும்நலமுடன் இருக்கிறார்கள். அவர் தக்க நேரத்தில் மக்கள் முன் வருவார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்த இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
வைகோ பேச்சு
இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கிறார்கள்.
என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது' என்று தெரிவித்தார்.