மழை நீரால் முற்றிலும் மூழ்கிய தாம்பரம் சுரங்கப்பாதை - போக்குவரத்துக்கு தடை
இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது நிலையில், தாம்பரம் ரயில் நிலைய சுரங்கப் பாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கிறது.
சுமார் 5 அடி வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.