மாநகராட்சியாகிறது தாம்பரம்: தமிழக சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

tambaram Corpoation
By Irumporai Aug 24, 2021 10:12 AM GMT
Report

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டபேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்றார்,

மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் திருச்செந்தூர், திருக்கோவிலூர், சுரண்டை, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், தாரமங்கலம், கூடலூர், காரமடை, அதிராம்பட்டினம், மானாமதுரை, முசிறி, இலால்குடி, கொல்லன்கோடு, உளுந்தூர்பேட்டை, வடலூர் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். புகளூர் மற்றும் டிஎன்பிஎல் புகளூர் பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.