வண்டலூர் மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை விளக்கம்

Chennai
By Fathima Sep 25, 2026 09:45 AM GMT
Report

தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குள்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது.

புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன.

பள்ளி வளாகம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு கிடைக்கப்பெறவில்லை.

எனினும், ஆதாரமும் இந்நிலையில் இதுவரை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை கருத்தில்கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.