தொடர்ந்து தீ பிடித்து எரியும் ராட்சத புளியமரம்..மர்மம் என்ன?
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து 15 மணி நேரமாக தீ பற்றி எரிந்து வருகிறது பழமையான புளியமரம் ஒன்று.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது.நுாறு ஆண்டுகள் பழமையான இம் மரம் கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலும் தனது உறுதி தன்மையால் விழாமல் இருந்து வந்தது.இந்த மரம் அப்பகுதி மக்களிடையே பேசும் பொருளாகவும் வெயில் காலங்களில் நிழல் தரும் பெரிய தோற்றம் கொண்ட அழகிய மரமாக காட்சியளித்து வந்தது.
பழமையான புளிய மரத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர்கள் பழமையான புளிய மரத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது மரத்தின் அடிவாரத்தின் அருகில் குடியிருந்த வீட்டில் அனைவரும் அயர்ந்து துாக்கி கொண்டு இருந்துள்ளனர்.இதனையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி வீட்டில் இருந்தவர்களை தட்டி எழுப்பியுள்ளார்.இதனையடுத்து மரம் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கடந்த 15 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.புளிமரம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.