பத்திரிக்கையாளர்களை தாக்கினார்களா தமன்னாவின் பாதுகாவலர்கள்? : வைரலாகும் புகைப்படம்
நடிகை தமன்னா பட ப்ரோமோஷனுக்காக ஹைத்ராபாத் வந்துள்ளார் ,அப்போது அவரை பார்க்க வந்த ரசிகர்கள் மீது பவுனசர்கள் தாக்கியதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமன்னா
நடிகை தமன்னா நடிக்கும் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தற்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வரும் தமன்னா , ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
பத்திரிக்கையாளர்களை தாக்கிய பவுன்சர்கள்
இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவரைப் புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு தமன்னாவின் பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் பவுன்ஸர்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.