தமன்னாவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா?, இது என்ன புது டுவிஸ்ட்டு - தீயாய் பரவும் தகவல்!

Tamannaah Tamil Cinema
By Vinothini Jul 08, 2023 08:11 AM GMT
Report

 பிரபல நடிகை தமன்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல் பரவி வருகிறது.

தமன்னா

திரையுலகில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் வியாபாரி படத்தில் நடித்தார் ஆனால் இவர் பெரிதளவில் பேசப்படவில்லை.

tamannah-already-maaried-with-pakistan-cricketer

அதன்பின்னர் இவர் கலோரி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், சுறா, பையா, சிறுத்தை, தில்லாலங்கடி, வீரம் ஆகிய படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது.

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், நடிகை தமன்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையதளங்களில் போட்டோக்கள் பரவி வருகின்றன.

tamannah-already-maaried-with-pakistan-cricketer

அதிலும் இவர் இந்தியாவை சேர்ந்தவர், அவரோ பாகிஸ்தான் இதனால் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இது குறித்து அவரிடம் கேட்டபொழுது அவர் சிரித்தபடியே "அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது, 2 குழந்தைகளுக்கு தந்தையாக அவர் உள்ளார். இதனால் அப்துல் ரசாக்குடன் திருமணம் என்ற கேள்வி எழ வேண்டாம்" என்று கூறியுள்ளார். ஆனால் இவர் திருமணம் செய்துகொண்டதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.