பாலிவுட் திரையுலகம்.. அந்த விஷயத்துக்கு மட்டும் கூப்பிடறாங்க - நடிகை வருத்தம்!
ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, தமிழில் அரண்மனை-4 படத்திற்கு பிறகு தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் தமன்னா.
வருத்தம்
அதன்பிறகு ஹிந்தியில் ஸ்திரி- 2 என்ற படத்திலும் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த பாடலும் காவாலா பாடலைப் போன்று மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில், பாலிவுடில் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
இதையடுத்து அவர் இது குறித்து பேசியதாவது, நான் நடனமாடும் ஒரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தால் எனக்கு பெரிய மகிழ்ச்சி. தமிழில் ரஜினி படம் என்பதற்காக ஜெயிலர் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினேன்.
அதேபோல் ஹிந்தியில் இயக்குனர் என் நண்பர் என்பதற்காக ஸ்திரி- 2 படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதை பார்த்துவிட்டு தொடர்ந்து அது போன்று ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாட என்னை அழைத்தால் எப்படி? என்று பாலிவுட் திரையுலகினருக்கு என்று தெரிவித்துள்ளார்.