டிவி தொகுப்பாளராகும் பிரபல நடிகை - ஆச்சரியத்தில் திரையுலகினர்

நடிகை தமன்னா டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கவிருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் நடிப்பில் சமீபத்தில் "நவம்பர் ஸ்டோரி" என்ற வெப் தொடர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்கவுள்ளார். ஆனால் அது ஒரு தெலுங்கு சமையல் நிகழ்ச்சியாகும்.

பிரபலமான ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சிகளில் ஒன்றான 'மாஸ்டர் செஃப்'- ஐ தமிழில் விஜய் சேதுபதியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்