கையை நீட்டிய ரசிகர்...கண் கலங்கி தமன்னா - ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க..!
மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவரின் செயலை கண்டு நடிகை தமன்னா கண் கலங்கினார்.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் படிக்காதவன், கல்லுாரி, வியாபாரி, அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை தமன்னா அண்மையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது ரசிகர்கள் பலரும் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கண் கலங்கிய தமன்னா
அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் தமன்னாவின் காலில் விழுந்தார். பின்னர் தமன்னாவுக்கு பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகர், தனது கையில் தமன்னாவின் முகத்தை பச்சை குத்தியிருந்ததை காண்பித்தார்.

அதை பார்த்த நடிகை தமன்னா அவரை கட்டியணைத்து கண் கலங்கினார். மேலும் அவர் கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். மேலும் இதுபோன்று ப்ளீஸ் செய்யாதீங்க என கேட்டுக்கொண்டார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan