எல்லை மீறிய தென்னிந்திய நடிகர் - தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
தமன்னா
2006 ஆம் ஆண்டு வெளியான வியாபாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா, அதன் பின்னர் பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
எல்லை மீறிய நடிகர்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தென் இந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், தென் இந்திய நடிகர் ஒருவர் படப்பிடிப்பின் போது என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டார். அது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு நடந்து கொண்டால் படத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்தேன். அதன் பிறகு வருத்தம் தெரிவித்த அவர், தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் என தெரிவித்துள்ளார்.
ஆனால், தென் இந்திய நடிகரின் பெயரை தமன்னா குறிப்பிடவில்லை.