கோலியுடன் டேட்டிங்; பாகிஸ்தான் வீரருடன் ரகசியத் திருமணம்? உண்மை உடைத்த தமன்னா!
விராட் கோலியுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக வதந்தி பரவுவதாக தமன்னா வேதனை தெரிவித்துள்ளார்.
கோலியுடன் டேட்டிங்?
2010 ஆம் ஆண்டில் விராட் கோலி மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தனர். தொடர்ந்து இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது.
அதேபோல் நகைக் கடை திறப்பு விழாவில் தமன்னாவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அப்துல் ரசாக் ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி, இருவரும் ரகசிய திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
தமன்னா ஆதங்கம்
இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள நடிகை தமன்னா, விளம்பரத்தில் நடிப்பதற்காக ஒரே ஒரு முறை விராட் கோலியை சந்தித்தேன். அதன் பின் அவரை சந்தித்ததோ, பேசியதோ கிடையாது. நகைக் கடை திறப்பு விழாவில் அப்துல் ரசாக்கும் தானும் பங்கேற்றது தற்செயலானது.
மற்றபடி, அப்துல் ரசாக்கின் வாழ்க்கை என்னவென்றுகூட தனக்கு தெரியாது. வதந்திகளை சமாளிப்பது கடினம். இதுபோன்றவை தனக்கு அதிக சங்கடத்தைத் தருகிறது.
எனினும் இவற்றை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் நினைக்க விரும்புவதை நினைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.