தொழில் அதிபரை திருமணம் செய்யும் தமன்னா - படு ஜோராக நடக்கும் திருமண ஏற்பாடு
பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
தமன்னாவிற்கு விரைவில் திருமணம்
மும்பைச் சேர்ந்த தமன்னாவை முன்னணி நடிகையாக உயர்த்தியது தென்னிந்திய சினிமா. தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் விரைவில் இவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 வயதை கடந்த நடிகையாக இருக்கும் தமன்னா மும்பையைச் சேர்ந்த இளம் தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமண ஏற்பாடுகள் மும்முரம்
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதால் அவரது பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராகி வருகிறார்களாம்.
தமன்னா திருமணத்திற்கு முன்பு சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதால், சில படவாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை தமன்னா தரப்பினார் சொன்னால் மட்டுமே நம்ப முடியும் என்கின்றனர் அவரது ரசிகர்கள் சிலர்.
மேலும் சில ரசிகர்கள் தமன்னாவிற்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.