புதிய மனைவியை தேடி பயணம் மேற்கொள்ளும் உலகின் உயரமான மனிதர் - எங்கு தெரியுமா?

Worlds Tallest Man Sultan Kosen
By Petchi Avudaiappan Dec 24, 2021 04:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உலகின் மிகவும் உயரமான மனிதர் சுல்தான் கோசென் புதிய துணையை தேடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மனிதர்களின் உயர வளர்ச்சிக்கு காரணமான மூளையின் தண்டுவடத்தின் கீழ் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பியின் வளர்ச்சி தென்கிழக்கு துருக்கிய நகரமான மார்டினில் பிறந்த சுல்தான் கோசென்னுக்கு அசாதாரணமாக இருந்தது. இதன் செயல்பாடு காரணமாக அவர் அசுர வளர்ச்சி பெற்றார். இதனால் சுல்தான் 8 அடி 3 அங்குலம் (251 செ.மீ.) உயரத்துடன் காணப்படுகிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு  சிரியப் பெண்ணான மெர்வ் டிபோவை அவர்  மணந்தார். ஆனால் சுல்தான் அரபு மொழி மட்டும் பேசியதால் இருவருக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ஜோடி சமீபத்தில் விவாகரத்து பெற்றது.

இந்நிலையில்சுல்தான் கோசென் தனது புதிய துணையை தேடி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளார்.ரஷிய பெண்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மிகவும் அழகானவர்களாகவும் இருப்பதை அறிந்தேன். எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு மீண்டும் துருக்கிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ரஷிய பெண் எனக்கு ஒரு மகனையும், மகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனையே நான் விரும்புகிறேன் என ரஷ்ய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.