பேச்சுவார்த்தையில் நடந்தது இதுதான்: திருமாவளவன் விளக்கம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திமுக இஸ்லாமிய கட்சிகளுடனும், காங்கிரஸ் உடனும் பேச்சுவார்த்தையை முடித்த நிலையில் மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் பேச்சு வார்த்தை முடிந்த பிறகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், டி. ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் திமுக தங்களின் நிலைப்பாட்டை கூறியதாகவும்,எத்தனை தொகுதியில் போட்டியிடுவது,என்னென்ன தொகுதிகள் என்பது பற்றி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.எனக் கூறினார்.