தாலிபான்களின் அட்டூழியம் - அவதியுறும் மக்கள்: பசியால் வாடும் குழந்தைகள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 100 நாட்களை கடந்தது. இந்த 100 நாட்களும் ஆப்கான் மக்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி தாலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இதனால் அங்கிருந்த மக்கள் தலை தெறிக்க வெவ்வேறு நாடுகளில் குடி பெயர்ந்தனர்.
மேலும் சில மக்கள் செல்ல வழியில்லாமல் அங்கேயே சிக்கி கொண்டனர். ஆர்ம்பத்தில் அதிகமாக பேசப்பட்ட இந்த சர்ச்சை தற்போது எங்கு சென்றது என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் இன்றோடு தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 100 நாட்கள் கடந்த நிலையில், அங்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அந்த வகையில், சார்குனா என்ற 35 வயது பெண் அவரது கஷ்டங்களை புலம்பி அழுதுள்ளார். அங்கு தினமும் ஒரு வேலை சாப்பிடுவதற்கு கூட வழியில்லை என்றும் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் பசியால் துடிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களுக்கு தினமும் ஒரு வேலை சாப்பாடு அல்லது பிரட் மட்டுமே கிடைப்பதாகவும், சில சமயங்களில் எதுவுமே கிடைக்காததால் சாப்பிடாமல் தூங்குவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பசியில் நேற்று பச்சை மாவை அள்ளி உண்டதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக அனைவரும் பசியால் இறந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.