இனி கல்லுரிகளில் பெண்களுக்கு இடமில்லை : தாலிபன்கள் நடவடிக்கைக்கு ஐ,நா கண்டனம்
ஆப்கன் பல்கலைகழங்களில் பெண்கள் படிக்க தடைவிதித்த தாலிபான் அரசிற்கு ஐ.நா தனது எதிர்பினை தெரிவித்துள்ளது.
தாலிபன்களின் ஆட்சி
ஆப்கானில் தற்போது தாலிபன்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள பல்கலைகழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தாலிபன் அரசு.
இது குறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் ஆப்கன் அரசின் உயர்கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை.

மோசமாகும் பெண்கல்வி
இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜியாவுல்லா ஹாஷிமி உறுதி செய்தார்.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று கூறும்போது, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.
பெண்கள் கல்வி கற்காமல் ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியடையும் என்று கவலை தெரிவித்தார். இதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளன.