செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தும் தலிபான்கள்: நடந்தது என்ன?
காபூல் நகரில் செய்தியாளர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கேமரா உள்ளிட்ட பொருட்களை தாலிபான்கள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்கள் பிடிக்கு வந்த உடனேயே பல்லாயிரக்கணக்கானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

தலைநகர் காபூலில் தாலிபான்கள் நுழைந்த உடனேயே பத்திரிகை அலுவலகங்களில் சோதனைகளை நடத்தினர். அதே சமயம் சர்வதேச செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தி ஊடகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் பேசினர் ஆனால் தாலிபான்கள் சொல்வதும் செயல்படுவதும் முரணாகவே உள்ளது.
வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பொதுமக்களை அச்சுறுத்துவது, பத்திரிகையாளர்களைத் தாக்குவது ஆகியவை தாலிபான்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
காபூலில் இருந்து ஒளிபரப்பாகும் Tolo டிவி சேனல் செய்தியாளர் Ziar Khan Yaad என்பவர்செய்தி சேகரித்து கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கப்பட்டார். இதேபோல் Wahida Faizi என்ற பெண் பத்திரிகையாளர் தாம் தாலிபான்களால் கொல்லப்படுவோம் என்பதால் நாட்டைவிட்டு வெளியேறுவதாக பி.பி.சி.செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.
TOLOnews Reporter, Cameraman Beaten by Taliban#Afghanistan https://t.co/7R2Ky5uGAA pic.twitter.com/TrS3ITrqnv
— TOLOnews (@TOLOnews) August 26, 2021
அதில் நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். ஆனால் என்னால் இந்த தேசத்தில் வாழ முடியாது. இங்கேயே நான் இருந்தால் தாலிபான்களால் கொல்லப்படுவேன். அதனால் என் நாட்டைவிட்டு வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.