தாலிபன்களுக்கு பாகிஸ்தான் உதவியிதற்கு ஆதாரம் எங்களிடம் இருக்கு : ஆப்கான் ராணுவம்!

pakistan taliban
By Irumporai Aug 24, 2021 08:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறியதால் தாலிபான்கள் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தனர் , இந்த நிலையில் தாலிபன்களுக்கு பாகிஸ்தான் நேரடியாக உதவி வருவதாக கூறி ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால் காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விமான நிலையத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாலிபன்களுக்கு பாகிஸ்தான் நேரடியாக உதவி வருவதாக கூறி ஆதாரங்கள் வெளியாகியுள்ளது அதில் தாலிபன் தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய பாகிஸ்தான் அடையாள அட்டைகளை ஆதரம் வெளியாகியுள்ளது.

 பாகிஸ்தான் அரசு தாலிபன்களுடன் ரகசியமாக கூட்டு வைத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களுக்கு  உதவி வருவதாக ஆப்கான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆப்கான் ராணுவம். முன்னதாக ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதற்கு பாகிஸ்தான் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.