வாழ்விழந்து தவிக்கும் ஆப்கான் மக்கள் .. நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்!
afghanistan
taliban
civilians
By Irumporai
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கந்தஹார், கோஷ்ட் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாகாணங்களில் 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் 136 பேர் காயமடைந்துள்ளதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தீவிரமாக போரிட்டு வரும் தாலிபன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில், 8-ஐ தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.தாலிபன்களின் கடுமையான தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மக்கள் வாழ்விடத்தை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
