பெண்களுக்கு இனிமேல் லைசென்ஸ் கிடையாது - அரசின் அதிரடி அறிவிப்பால் சர்ச்சை
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதேசமயம் ஐ.நா.சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் புள்ளி விவரப்படி, உலகிலேயே அதிகளவிலான உணவு பாதுகாப்பின்மை ஆப்கானிஸ்தானில் நிலவுகிறது.
அந்நாட்டில் 2.3 கோடி பேர் உணவின்றி தவிப்பதாகவும், சுமார் 95 சதவீத மக்களுக்கு உரிய விதத்தில் உணவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பாலின சமத்துவத்திற்கு எதிரான பல நடவடிக்கையை தாலிபான் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானில் ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை என தாலிபான் அரசு உத்தரவிட்டது.
இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்க நாட்டில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுவதால் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களுக்கு வானக ஓட்டும் உரிமம் தற்போது வழங்கப்படுவதில்லை என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.