உயிருள்ளதை டிவியில் காட்டக்கூடாது - தாலிபான் சட்டத்தால் குழப்பத்தில் ஆப்கானிஸ்தான்
உயிருள்ள எதையும் டிவியில் காட்டக்கூடாது தாலிபான்கள் சட்டம் இயற்றியுள்ளனர்.
தாலிபான் ஆட்சி
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் புதிதுபுதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.
இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத் தெரிவித்த அவர்கள், பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர். ஏற்கனவே பெண்கள் பள்ளிக்கு, வேலைக்கு செல்ல கூடாது என தடை விதித்தனர். மேலும் பெண்கள் ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்திற்கு கட்டுப்பாடு
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றையும் டிவியில் காட்ட தடை விதித்துள்ளனர். தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் (living beings)புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.
இந்த சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை காட்டாமல் எப்படி செய்தி வெளியிடுவது என ஊடகங்கள் குழப்பத்தில் உள்ளன. எனவே சில ஊடகங்கள் மலை, நதி என இயற்கை காட்சிகளை ஒளிபரப்ப தொடங்கி விட்டன.
தாலிபானின் இந்த அடக்குமுறை சட்டங்கள் குறித்து சர்வேதச நாடுகள், ஐ.நா. சபை கவலை தெரிவித்தாலும் தலிபான்கள் அதை பொருட்படுத்துவதில்லை.