காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம் - தாலிபான்கள் அறிவிப்பு
உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போம் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்து வருகின்றனர். அவர்களது ஆட்சியில் உயிர்வாழ பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே தாலிபான்களின் தோகா அரசியல் அலுவலக செய்தி தொடர்பாளர் சுகைல் ஷகீன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் காஷ்மீர் உள்பட உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்றும், முஸ்லிம்கள் உங்கள் மக்கள், உங்கள் சொந்த குடிமக்கள், உங்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் சம உரிமை உண்டு என அந்தந்த நாடுகளுக்கு நாங்கள் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.