‘நீங்கல்லாம் என்னய்யா..இந்தியா தான் பெஸ்ட்டு’ - இந்தியாவை பாராட்டி தள்ளிய தலிபான்கள் : காரணம் என்ன?

talibanpraisesindia talibanindiapakistan wheatexport
By Swetha Subash Mar 06, 2022 07:48 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

சாப்பிட முடியாத அளவுக்கு தரம் குறைந்த கோதுமையை வழங்கியதாக பாகிஸ்தான் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்த தலிபான்கள், இந்தியா அனுப்பிய கோதுமையின் தரம் நன்றாக உள்ளதாக பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் கோதுமையின் தரம் குறித்து தலிபான் அதிகாரி புகார் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நீங்கல்லாம் என்னய்யா..இந்தியா தான் பெஸ்ட்டு’ - இந்தியாவை பாராட்டி தள்ளிய தலிபான்கள் : காரணம் என்ன? | Taliban Praises India For Good Quality Of Wheat

அந்த வீடியோவில்,

"பாகிஸ்தான் வழங்கிய கோதுமை உண்ணக்கூடிய தரத்தில் இல்லை, அதே நேரத்தில் நல்ல தரமான கோதுமையை அனுப்பிய இந்தியாவுக்கு நன்றி" என தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வைரலான வீடியோ பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கோபத்தை ஏற்படுத்தவே இந்த கருத்தினை கூறிய தலிபான் அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த மாதம், முதல் கட்டமாக இந்தியா ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக கோதுமையை அனுப்பியது.

அடுத்ததாக 2000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிச் சென்ற இரண்டாவது கப்பல், வியாழன் அன்று அமிர்தசரஸின் அட்டாரியில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்குப் புறப்பட்டது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.