“செய்திகள் வாசிப்பது தாலிபான்கள்” - துப்பாக்கி முனையில் அட்டகாசம்

talibanmilitants hostwithguns
By Petchi Avudaiappan Aug 30, 2021 05:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். அங்கு வாழும் மக்கள் மீதான தாலிபான்களின் அடக்கு முறையை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு டோலோ நியூஸ் நிறுவன ஆப்கானிய நிருபர் மற்றும் கேமராமேன் ஆகியோர் காபூலில் தாலிபான்களால் தாக்கப்பட்டனர். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தாலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம், அவர்கள் தீங்கற்றவர்கள் என ஆப்கன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மரண பீதியில் செய்தி வாசிக்க அவர் பின்னால் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அங்கு பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளதாக உலக நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.