பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்க விடப்பட்ட மனித உடல் - தாலிபான்கள் அட்டகாசம்

Afghanistan Kabul Talibans
By Petchi Avudaiappan Aug 31, 2021 07:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு தாலிபான்கள் செல்லும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் நேற்றுடன் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டது. இதனால் அந்நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள் கொண்டாடி வருகின்றனர்.

இறுதியாக அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின் அங்கு சென்ற தாலிபான்கள் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவால் விட்டுச்செல்லப்பட்ட விமானங்களை ஆய்வு செய்தனர்.

பின் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை அவர்கள் இயக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. காந்தகார் மாகாணத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஹெலிகாப்டரில் மனித உடல் கட்டி தொங்கவிடப்பட்டு இருப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இது மனித உடலா அல்லது பொம்மையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாலிபான்கள் தங்கள் அட்டகாசத்தை தொடங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.